பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட 2 கோடி தடுப்பூசிகள் அனுப்பியது மத்திய அரசு
புதுடெல்லி, ஆக.26-
நாடெங்கும் பள்ளிக்கூடங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன இந்தச் சூழ்நிலையில் பள்ளி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்களுக்கும் முதலில் தடுப்பூசி போடுவது அவசியமான ஒன்றாகும். அதனால் அனைத்து மாநிலங்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் பொருளாக தடுப்பூசி போடுவதற்காக 2 கோடி கூடுதல் தடுப்பூசி மருந்துகளை மத்திய சுகாதாரத்துறை அனுப்பி உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சூர் மாந்தவியா புதன்கிழமை என்று தெரிவித்தார்.
கூடுதலாக அனுப்பப்படும் தடுப்பூசிகள் ஆகஸ்டு மாதம் 27ஆம் தேதிக்கும் 31ம் தேதிக்கும் இடையே மாநில அரசுகளுக்கு கிடைக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்திய அளவில் பள்ளிக்கூடங்களில் 97 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் சுகாதாரத் துறையில் முன்னோடி ஊழியர்கள் என குறிப்பிடப்படாவிட்டாலும் இவர்களைக் காப்பது பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உதவும் என்று கருதப்படுகிறது அதனால் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவது அவசியம் என கொரானா தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
இணை நோய்கள் உடைய 12 வயது முதல் 17 வயது உடைய மாணவர்களுக்கும் தடுப்புசி வழங்குவது அவசியம் என்று தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை வழங்கியிருக்கிறது.
புதுடெல்லி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் தலைமையில் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் சுகாதார துறை அதிகாரிகளின் தடுப்பூசி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அன்று நடந்தது இந்த கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் கட்டாயமாக தடுப்பூசி போடவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
No comments
Thank you for your comments