Breaking News

வேலூர் உட்பட 10 மாவட்டங்களில் புதிதாக மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை

தமிழ்நாட்டில் புதிதாக 10 மாவட்டங்களில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி இன்று (26-8-2021) அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில்   2021 – 2022ம் ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.


உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது  உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி உரையாற்றியதாவது, 

தமிழ்நாட்டில் புதிதாக 10 மாவட்டங்களில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், தருமபுரி, புதுக்கோட்டை, திருக்கோவிலூர், வேலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்

செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்பட உள்ளது.

வெவ்வேறு பாடப் பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட உள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழ் வழியில் பட்டயப்படிப்புகள் அறிமுகம்

சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும்

பி.காம் பட்டயப்படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வழிவகை செய்யப்படும்.

திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சேலம், சிவகங்கையில் திறந்தநிலை பல்கலைக்கு புதிய மண்டல மையங்கள் உருவாக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மானிய கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி வாழ்த்து பெற்றார். 

No comments

Thank you for your comments