Breaking News

தேநீர் கடையில் முன்விரோதம் காரணமாக திடீர் தாக்குதல்..! - தொடர் கதையாகும் அவலம்... பீதியில் வியாபாரிகள்...

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தேனீர் கடையில் புகுந்த கும்பல் ஒன்று,  இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .

விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் மாலை தாக்கப்பட்ட இளைஞர் டீ சாப்பிட வந்ததாக கூறப்படுகிறது.

முன்விரோதம்  காரணமாக அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் அவரை பார்ப்பதற்காக உள்ளே புகுந்து அவரை அடித்தது மட்டுமில்லாமல், அந்த ஓட்டலில் இருக்கும் அனைத்தையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.

இது சம்பந்தமாக புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து  வியாபாரிகள் கூறியதாவது, 

கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியில் அடிக்கடி ஒரு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து தாங்கிக் கொள்வது வழக்கமாகி விட்டது. 

அதுமட்டுமின்றி, இந்த கும்பல் சாட்சி இருக்ககூடாது என்பதற்காக,  ஓட்டலில் உள்ளே புகுந்து சிசிடிவி ஹாட் டிஸ்க் உடைத்து அழித்துவிட்டதாக கூறுப்படுகிறது.  

காவல்துறை வழக்கு பதிவு செய்தாலும் பெரும்பாலும் தாக்கியவர்களை கைது செய்யப்படுவது இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அதே சமயத்தில் காயமடைந்தவர்கள் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தற்போது சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்,  வியாபாரிகள் கூறுவதாவது,  

அவ்வப்போது மோதல்கள் நடப்பதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பகின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற  கோரிக்கையை வியாபாரிகள் முன் வைத்திருக்கிறார்கள்.

No comments

Thank you for your comments