படப்பிடிப்பில் நடிகர் சேரனுக்கு தலையில் பலந்த காயம்!
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 8 தையல்கள் போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். ரெங்கநாதன் தயாரித்து வருகிறார். நடிகர்கள் சேரன், மல்லூரி கௌதம் கார்த்திக் உட்பட நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மின்சார வாரியத்துக்கு பின்புறம் உள்ள அங்குவிலாஸ் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் ஆனந்தம் விளையாடும் வீட்டின் கட்டடத்தை சுற்றி பார்க்கும் காட்சியில் நடிகர் சேரன் கால் இடறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று 8 தையல்கள் அவர் தலையில் போடப்பட்டது.
பின்பு அவர் வலியை பொருட்படுத்தாமல் தனக்குள்ள காட்சியில் நடித்துக் கொடுத்தார். இதனால் சேரனின் மன ஆற்றலை நடிகர்களும், படக்குழுவினரும் பாராட்டினர்.
இதையடுத்து நடிகர்களுக்கு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் நந்தா பெரியசாமி தெரிவித்தார்.
🔏 திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ரமேஷ்
No comments
Thank you for your comments