Breaking News

மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் கவனம் ஈர்ப்பு போராட்டம்..!

தருமபுரி:

தருமபுரியில் மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் தபால் அனுப்பி அரசு கவனம்  ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.    


மறுமலர்ச்சி ஜனதா கட்சியின்  மாநில தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு தபால் மூலம் அனுப்பும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. 

அந்த மனுவில் ஆரம்பம் முதல் உயர்கல்வி வரை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணங்களை அரசு ஏற்க வேண்டும்.  கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 

அனைவருக்கும் சமமான கல்வி தரமான கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தில் கோரிக்கை மனுவை தபாலில் அனுப்பி அரசு கவனம் ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது. 

இதில் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். 

மாநில ஒருங்கிணைப்பாளர் இளவழகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், மாவட்ட தலைவர் சுசீந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments