Breaking News

அலட்சியம் வேண்டாம்... கடுமையான எச்சரிக்கை... முதல்வர் மு.க.ஸ்டாலின்


சென்னை:

கொரோனா பெருந்தொற்று பொதுமக்கள் வாட்டி வதைக்கிறது - அலட்சியம் வேண்டாம்.! எச்சரிக்கையாக இருப்போம்.! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.


அனைவரது வாழ்க்கையையும் கொரோனா பெருந்தொற்று முடக்கிப்போட்டுள்ளது   இக்கட்டான காலகட்டத்தில் இருந்து மீள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது   பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுத்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் . 

அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; கொரோனாவை தடுப்போம்  

கடந்த 18 மாதங்களாக கொரோனா பெருந்தொற்று நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைக்கிறது    மருத்துவ கட்டுப்பாடுகள், மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்போடு கூடிய சேவையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மக்கள் தொகை அதிகமிருந்தாலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.  

பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

சில இடங்களில் அதிகளவில் கூட்டம் சேரும் பகுதிகளை மூட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டமாக கூடுவதன் மூலம் கொரோனா பரவலுக்கு மீண்டும் பொதுமக்களே வழிவகுத்துவிடக் கூடாது

கொரோனா 3ஆம் அலை வந்தாலும், அதை எதிர்கொள்ள மருத்துவ கட்டமைப்போடு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

இருப்பினும், பொதுமக்கள் ஒருபோதும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது - விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

கொரோனா தடுப்பூசியே நமது பேராயுதம் என்பதால், அதை போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள  என்று முதலமைச்சர் கோரிக்கை

மேலும் இதுகுறித்து சமுக வலைதளத்தில் வீடியோவோடு பதிவிட்டுள்ளார்..

அனைவரது வாழ்க்கையையும் முடக்கிப்போட்டிருக்கும் காலகட்டத்தில், இதிலிருந்து மீள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுத்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; #ThirdWave தடுப்போம் #MASKUpTN

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்

No comments

Thank you for your comments