Breaking News

வேலூர் உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை :

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நீலகிரி, கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக வருகிற 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வாலாஜாவில் 5 செ.மீட்டரும், மகாபலிபுரத்தில் 4 செ.மீட்டரும், திருக்கழுக்குன்றம், திருவாலங்காடில் தலா 3 செ.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments