ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா... தலைமை வகிக்கும் முதல் இந்திய பிரதமர் மோடி...!
புதுடெல்லி:
ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.
இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும்.
ஜூலை மாதத்தில் பிரான்ஸ் நாட்டின் தலைமைப் பதவி இருந்தது. அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு இந்திய தலைவர்கள் தலைமை வகித்து நடத்தலாம். இப்பொழுது பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்கள் எல்லாம் காணொளிக் காட்சி முறையில்தான் நடத்தப்படுகின்றன. காணொளிக் காட்சி முறையிலும் இந்திய தலைவர்கள் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தலாம்.
இதற்கு முன்னர் 1992 ஆம் ஆண்டு பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்தது அப்பொழுது நடந்த பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் அன்றைய பிரதமரான நரசிம்மராவ் கலந்து கொண்டார்.
இப்பொழுது பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு இந்திய பிரதமர் தலைமை வகிக்க இருக்கிறார் அந்த வகையில் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையும்.
ஆகஸ்ட் மாதத்தில் மூன்று மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து கூட்டம் நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த இருக்கிறது.
1. கடற்பயண பாதுகாப்பு
2. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை
3. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள்.
இந்த மூன்று தலைப்புகளில் எந்த தலைப்பு தொடர்பான கூட்டத்திற்கு இந்திய பிரதமர் தலைமை வகிப்பது என இன்னும் முடிவாகவில்லை.
பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இல்லை. ஆனால் ஒராண்டு காலத்துக்கு இந்தியா உறுப்பினராக செயல்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஆகஸ்ட் மாதத்தில் கூட்டங்களுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
![]() |
| PR/Ambassador of India to United Nations, New York . Earlier Secretary in Ministry of External Affairs, New Delhi . |
இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி:
இந்தியா தனது முதல் பணி நாளான திங்கட்கிழமை (02.08.2021), இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, செய்தியாளர்களை சந்தித்து பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாத திட்டம் குறித்து விளக்குவார்.
அமைதிப்படை வீரர்களின் நினைவாக இந்தியா ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யும். சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை திட்டமிட்டுள்ளது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் திருமூர்த்தி கூறினார்.
மேலும், ஜூலை மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தியதற்காகவும், இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்காகவும் பிரான்சுக்கு திருமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் சையது அக்பருதீன் தெரிவித்தாவது;
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்க போகும் முதல் இந்திய பிரதமராக நரேந்திர மோடி இருப்பார் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.
![]() |
| Former India's permanent representative at the UN Syed Akbaruddin Dean, Kautilya School of Public Policy () File photo |
மேலுகடந்த 75 ஆண்டுகளில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு இந்திய தலைவர் ஒருவர் தலைமை வகிக்க முன் வந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்தியத் தலைவர்கள் உலகை வழி நடத்த தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றும் அக்பருதீன் தெரிவித்தார்.
ஐநாவுக்கான இந்திய தூதராக இருந்து ஓய்வு பெற்ற சையத் அக்பருதீன் தற்போது பொது கொள்கைக்கான கௌசல்யா கல்வி நிறுவனத்தின் டீன் ஆக விளங்குகிறார்.
A first in the making…
— Syed Akbaruddin (@AkbaruddinIndia) August 1, 2021
With India as President of @UN Security Council in August, an Indian Prime Minister may perhaps preside, albeit virtually, a Council meeting for 1st time on 9 August 2021.
Pic: From last visit of PM Shri @narendramodi to UN in 2019. pic.twitter.com/OxaZbKZsNq
A feeling of great pride and humility as I take my place in the @UN #SecurityCouncil as PR of #India.#IndiainUNSC @MEAIndia pic.twitter.com/QxzAlUgheT
— PR/Amb T S Tirumurti (@ambtstirumurti) January 5, 2021
As we take over UNSC Presidency for August, look forward to working productively with other members.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 1, 2021
India will always be a voice of moderation, an advocate of dialogue and a proponent of international law. pic.twitter.com/kPRGnFOz87
Delighted to call on Foreign Minister of Iraq HE. Dr Fuad Hussein @Fuad_Hussein1
— PR/Amb T S Tirumurti (@ambtstirumurti) July 31, 2021
Discussed the forthcoming UN Security Council meeting of United Nations Assistance Mission for Iraq @UNIraq during 🇮🇳 India’s Presidency of #UNSC#IndiainUNSC pic.twitter.com/zytDohw2Hw




No comments
Thank you for your comments