Breaking News

அகவிலைப்படி உயர்வு வழங்ககோரி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

தருமபுரி ஆக.17-

அகவிலைபடி உயர்வை வழங்ககோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு சார்பில் தருமபுரி மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


1.7.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை வழங்கவேண்டும். 1.4.2022 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என்ற நிதி அமைச்சரின்  அறிவிப்பை தமிழக அரசு கைவிடவேண்டும். என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

சிஐடியு மாநில துணைத் தலைவர் பி. ஜிவா தலைமை வகித்தார் சமேளனத்தின் திட்டசெயலாளர் என்.தேவராஜன், தவமாறன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு திட்ட தலைவர் லெனின் மகேந்திரன், அண்ணா தொழிற்சங்கம் மின்சாரபிரிவு திட்ட செயலாளர் அன்பழகன், பொறியாள  சங்க திட்டசெயலாளர் பொறி முரளி, தொழிலாளர் பொறியளர் ஐக்கிய சங்க திட்டசெயலாளர் ஆறுமுகம், என்எல்ஓ  சங்கதிட்டசெயலாளர்  பிரபாகரன்,  டாக்டர் அம்பேத்கர் எம்ளாயிஸ் சங்க இணைசெயலாளர் வினோத்குமார், ஜனதாசங்கம் திட்ட செயலாளர் பொறி கோபி, எம்ளாயிஸ் பெடரேசன் சங்க திட்டசெயலாளர் கோகுல்தாஸ், பொறியாளர் அமைப்பு திட்ட தலைவர் தோழர் ஆர் சுந்தரமூர்த்தி  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். கூட்டு நடவடிக்கை குழு சங்கங்கள் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் திரளானோர் பங்கேற்றனார். ஐக்கிய சங்க பொருளாளர் வேடியப்பன் நன்றி கூறினார்


No comments

Thank you for your comments