Breaking News

திமுகவை அம்பலப்படுத்திய பட்ஜெட்-ஓபிஎஸ் அறிக்கை

சென்னை:

திமுக தாக்கல் செய்த முதல் பட்ஜெட் திமுகவை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளது. மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தி கொண்டுள்ளனர் என்று தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.



தமிழக அரசின் நிதி நிலைமையை நன்றாக அறிந்து கொண்டும் வாக்குறுதிகளை அமல் செய்ய இயலாது என்பதை உணர்ந்து கொண்டும் பொய்யான வாக்குறுதிகளை திமுக தந்தது.

2021 - 22ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பல துறைகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது

உணவு மானியம் ரூ. 9604.27 கோடியிலிருந்து 8437.57 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது கடந்த 3 மாதத்தில் மட்டும் புதிதாக 4.5 லட்சம் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பஞ்சப்படி வழங்குவதை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

 பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வரும் பொழுது சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 93.17 ஆக இருந்தது. ஆனால் இப்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.49 ஆகும்.

இத்தகைய சூழ்நிலையில் 3 ரூபாய் குறைப்பு எந்த வகையில் மக்களுக்கு பயன்படும்.

மக்கள் மத்தியில் அதிருப்தியை தான் அரசின் அறிவிப்பு உருவாக்கியுள்ளது.

தமிழக அரசின் வருமானத்தைப் பெருக்குவதற்கு புதிதாக சுரங்க கொள்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர வருமானத்தை பெருக்குவதற்கு வேறு எந்த அறிவிப்பும் வரவு செலவுத்திட்டத்தில் வெளியிடப்படவில்லை.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வருவாய், வருவாய் பற்றாக்குறை, பொதுக்கடன் இதைப்பற்றி எல்லாம் பேசப்பட்டுள்ளது ஆனால் இவற்றை மாற்றியமைக்க என்ன செய்யப்படும் என்பது குறித்து தெளிவான திட்டமும் அறிவிப்பும் இல்லை. திமுக அரசின் முதல் பட்ஜெட் மக்களுக்கு அதிர்ச்சியும் கோபமும் தரும் பட்ஜெட்டாக உள்ளது. திமுக இந்த பட்ஜெட் குறித்து பெருமை அடித்துக் கொள்வதற்கு வரவு செலவுத்திட்டத்தில் எதுவும் இல்லை என்று பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பழனிசாமி அறிக்கை

நகைக் கடன் ரத்து செய்யப் படுவதற்கும் பயிர் கடன் ரத்து செய்யப் படுவதற்கும் அரசு நிபந்தனைகளை அறிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இத்தகைய முயற்சி மக்களுக்கு எந்த பலனையும் அளிக்காது எனவே கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய நகை கடனையும் பயிர் கடனையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தனியாக மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments