வருவாய் வட்டாட்சியர் வாகனம் முன்பு நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
கடலூர்
விவசாயிகளின் நெல்லை முறையாக கொள்முதல் செய்ய கோரி வருவாய் வட்டாட்சியர் வாகனம் முன்பு நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தர்மக்குடிகாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது
இந்த நிலையில் 20 நாட்களுக்கு மேலாகியும் நெல்லை கொள்முதல் செய்யாத நிலையில் நேற்று இரவு பொழிந்த மழையில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது.
இந்தநிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் முறையாக விவசாயிகளுக்கு பதில் அளிக்காததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.
அப்போது விவசாயிகளிடம் சமாதானம் பேச வந்த திட்டக்குடி காவல்துறையினர் மற்றும் திட்டக்குடி தாசில்தார் பேச்சுவார்த்தைக்கு வரும்போது ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்மணிகளை தாசில்தார் வாகனம் முன்பு கொட்டி வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.
No comments
Thank you for your comments