இது மக்கள் ஆட்சி... நியாய விலை கடை வீடு தேடி வரும் ... எம்.எல்.ஏ., மதியழகன்
கிருஷ்ணகிரி:
போச்சம்பள்ளியில் 100 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் விழாவை பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதியழகன் தொடங்கி வைத்தார்.
உங்களாட்சியில் (மக்கள் ஆட்சி) இனி வரும் காலங்களில் ரேஷன் நியாய விலை கடை வீடு தேடி வரும் எனவும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போச்சம்பள்ளி மற்றும் வெப்பாளம்பட்டி கிராமத்தில் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு போச்சம்பள்ளி வட்டாட்சியர் முருகேசன் தலைமை வகித்தார், மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்துகொண்டு சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ரையாற்றியதாவது;
அதிமுக ஆட்சியில் சுமார் ஒரு பொதுவினியோக அடையாள அட்டை வருவதற்கு சுமார் 4 ஆண்டுகளாக ஆகும் எனவும், தற்போது ஆட்சியில் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அண்டை நாடு நம்ம தமிழகம் முன்னுதாரணமாக பேசப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இதில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தால் தகுதிவாய்ந்த பயனாளிகளின் குடும்ப அட்டை 15 நாளைக்குள் சம்பந்தப்பட்டவரிடம் வந்துசேரும் எனவும் மீண்டும் உங்களுக்கான ஆட்சி இது.
உங்களாட்சியில் (மக்கள் ஆட்சி) இனி வரும் காலங்களில் ரேஷன் நியாய விலை கடை வீடு தேடி வரும் எனவும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் மோகன், வட்ட வழங்கல் ஆய்வாளர் ஜெய்கணேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் சரவணன், ராகேஷ்சர்மா, ஒன்றிய செயலாளரும் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவருமான சாந்தமூர்த்தி, வெப்பலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் வித்யாசங்கர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வடிவேலன் மாவட்ட விவசாய அணி சக்கரவர்த்தி, மதிகுமரன், செந்தில், அம்மன் ராஜா, பஜாஜ் இளையராஜா சென்னகேசவன், ஜல்லிக்கட்டு கௌதம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments