அதிகாரிகளை கண்டித்து சாலையில் வாழை நட்டு போராட்டம்
கன்னியாகுமரி
சாலைகளை சீரமைக்க கோரி செப்பனிடாத நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் சாலையில் வாழை நாடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட களியல் முதல் ஆறுகாணி வரை உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன.
அதிலும் குறிப்பாக மழை பெய்தால் சாலை இருக்கும் இடமே தெரியாமல் சேறும், சகதியுமாக வயல்வெளி போல காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சாலைகளை சீரமைக்கக்கோரி பல்வேறு தரப்பினர் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சாலைகளை சீரமைக்க கோரி செப்பனிடாத நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் சாலையில் வாழை நாடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

No comments
Thank you for your comments