சென்னையை சேர்ந்த ஆடிட்டரை கடத்தி கொலை... மாந்தோப்பில் புதைப்பு...
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டரை கடத்தி கொலை செய்து மாந்தோப்பில் புதைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை செய்தார்.
![]() |
| ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதாப் |
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜனரஞ்சன் பிரதாப். இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தன்னுடன் பணிபுரியும் கிருஷ்ணகுமார் என்பவருடன் கடந்த 26ம் தேதி சென்னையிலிருந்து வேலூருக்கு காரில் வந்துள்ளார். மேலும் இவர்களுடன் பணிபுரியும் சபரீஷ் என்பவர் மற்றொரு காரில் வந்துள்ளார்.
பின்னர் இரவு 10 மணியளவில் ஜனரஞ்சன் பிரதாப் தன் மனைவி பூர்ணிமா பிரதான்வுக்கு போன் செய்து தான் வேலூருக்கு வந்த வேலை முடிந்து விட்டதாகவும் மறுநாள் கிருஷ்ணகிரியில் வேலை உள்ளது என்றும் அங்கு செல்வதாக கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி ஜனரட்சன் பிரதாப்புக்கு அவரது மனைவி போன் செய்ததாகவும், அப்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாகவும் இதையடுத்து அவருடன் சென்ற கிருஷ்ணகுமார், சபரீஷ் இருவருக்கும் பல முறை அலைபேசியில் அழைத்தும், அலைபேசியை எடுக்காமல் புறகனித்தாக தெரிகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த பூர்ணிமா பிரதான், கடந்த 28ம் தேதி கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் காவல் ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் மாயமான ஜனரஞ்சன் பிரதாப் உடன் சென்ற கிருஷ்ணகுமார், சபரீஷ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் அவரை கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் உடலை போச்சம்பள்ளி அடுத்த கொடமாண்டப்பட்டி அருகே உள்ள முருக்கம்பட்டி கிராமத்தில் சாலையோரம் உள்ள ஆளில்லாத மாந்தோப்பில் கொன்று புதைத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி கொட்டும் மழையில் நேரில் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பு, காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல், சரவணன், அலெக்சாண்டர், கிருத்திகா, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் பிரபாவதி, காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் உடனிருந்தனர்,
மேலும் கடத்தலில் ஈடுபட்டு கொலை செய்த கிருஷ்ணகுமார், சபரீஷ் ஆகியோர் கூறிய தகவலின்பேரில் மாந்தோப்பில் புதைக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில் மாலை இந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் உடலை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இச்சம்பவம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

No comments
Thank you for your comments