Breaking News

ஏரியினை ஆழப்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

கழுதூர், ஆக.22-

கழுதூர் ஊராட்சியில் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றி கொடுத்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்றதலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சியில் 27 ஏக்கர் நிலப்பரப்பில்  சித்தேரி என்னும் ஏரி உள்ளது. அதில் விலங்குகள், கால்நடைகள்  தண்ணீர் அருந்துவது வழக்கம்.

இந்நிலையில்  கடந்த 50 ஆண்டுகளாக ஏரியை சுற்றியுள்ள விவசாயிகள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளார்கள். இதனால் ஏரியின் அளவு குறைய ஆரம்பித்தது இதனை அறிந்த பொதுமக்கள் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பவணர் இடம் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தரவேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்பேரில் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பவனார் ஆணையின்பேரில்  ஏரியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து வட்டாட்சியர் தமிழ்செல்வி, பிடிஒ சண்முக சிகாமணி, தண்டபாணி, விஏஒ சுகுந்தன், முன்னிலையில் சர்வேயர் மூலம் இடம் அளவீடு செய்யப்பட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கரைகள் அமைக்கப்பட்டது.

பல ஆண்டுகாலம்  கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர்களுக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

மேலும் ஏரியினை ஆழப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments