Breaking News

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஜவுளி கடைகள்... கொரோனா தொற்று அதிகரிக்கும் ஆபத்து...

காஞ்சிபுரம்:

ஆவணி மாதம்  முகூர்த்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் பட்டு சேலை எடுக்க குவிந்த கட்டுக்கடங்காத கூட்டம்.

முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பட்டு சேலை கடை களில் குவிந்துள்ள கூட்டத்தால் நோய்த் தொற்று பரவும் அபாயம்.


பட்டு சேலைகளுக்கு உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில்  ஆவணி மாதம்  முகூர்த்த நாள்  முன்னிட்டு தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமண விசேஷங்களுக்கு பட்டுச் சேலைகள் எடுக்க வெளி மாநிலம் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு சொந்த வாகனங்களில் காஞ்சிபுரத்தில் குவிந்து உள்ளனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பட்டுச்சேலை எடுக்க கடைகளில் சமூக இடைவெளியை மறந்து குவிந்துள்ளனர்.


மேலும் பட்டுச்சேலை எடுக்க வந்த பொதுமக்கள் உணவருந்தும் ஹோட்டல்கள் வாசல்களில் நெடுநேரம் காத்து கிடக்கின்றனர்.

அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் குவிந்து உள்ளதால் காஞ்சிபுரம் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகள் காந்தி சாலை, காமராஜர் சாலை, ரயில்வே சாலை, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

No comments

Thank you for your comments