Breaking News

சுதந்திர தின விழா :இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை மாற்றியுள்ளோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!



சென்னை: 

நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகாலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோட்டையில் முதன்முதலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்.

தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் மு.ஸ்டாலின் முதன்முதலாக தேசியக்கொடி ஏற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழ்நாட்டை இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாற்றியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்தார்.

இவ்விழாவில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகாலமாக கொண்டாடப்படுகிறது.


சென்னை கோட்டைக்கு தேசிய கொடி ஏற்ற வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல் துறை உள்பட 7 துறைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போலீஸ் அதிகாரிகளை அறிமுகம் செய்து வந்தார். 


இதனை தொடர்ந்து தமிழக தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். 

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்கள், தியாகிகளுக்கு அழைப்பில்லை.


இதன்பின்னர் தமிழக மக்களுக்கு அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில்,  

தாயின் மணிக் கொடி பாரீர்.. இந்த நாளில் இந்திய தியாகிகள் அனைவருக்கும் எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன். 

முதன் முதலாக தேசியக்கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொது வாழ்க்கையில் 50 அன்டுகளாக உழைத்த என்னை முதல்வாராக ஏற்றுக் கொண்ட தமிழக மக்களுக்கு நன்றி. 

75-வது சுதந்திர தூண் கல்லாலும், மண்ணாலும் உருவானதல்ல. பல்வேறு தியாகிகளின் ரத்தத்தாலும், சதையாலும் உருவானதாகும்.

இந்தியாவின் அனைத்து முதல்வர்களுக்கும் இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் சுதந்திர சிந்தனையாளர் கருணாநிதி. இந்தியாவில் எத்தனையோ முதல்வர்கள் வந்தாலும் முதல்வர்கள் கொடியேற்றலாம் என்னும் உரிமையை பெற்று தந்தவர் முத்தமிழறிஞர் கருணாநிதி. 

திராவிடக் கட்சியின் ஆணிவேரான நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த நூற்றாண்டு இந்த ஆண்டாகும். மகாகவி பாரதிக்கும் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.

சீன போரின் போது இந்திய நாட்டிற்காக நிதி திரட்டி கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. 

பாகிஸ்தான் போரின் போது இந்தியாவுக்காக நிதி திரட்டியவர் கருணாநிதி. கார்கில் போரின் போது 3 தவணைகளாக நிதி திரட்டி கொடுத்தவரும் கருணாநிதிதான். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டும்.

இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டை நாம் மாற்றியுள்ளோம். திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். 

கொரோனா நோய் தொற்றை நாம் வலுவாக போராடி வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ப்பட்டுள்ளது. 

ஏற்றத்தாழ்வற்ற மனித உரிமை சமுதாயமாக நாம் மாற வேண்டும். நேர்மையுடைய தமிழ்நாட்டை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் அனைவரும் காந்திக்கு உறுதுணையாக இருந்தனர்.

தேசப்பிதா மாகத்மா காந்தி தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த மரியாதையை கொண்டிருந்தார். சாதி, மதம் பிரிவுள்ள இந்திய திருநாட்டை வழிநடத்த நமக்கு கிடைத்த சிறந்த ஆயுதம் காந்தியமாகும். 

மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ 6 கோடியில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும். விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரின் ஓய்வூதியம் ரூ.8,500-ல் இருந்து, ரூ 9 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் விவரம் பின்வருமாறு:- 

கல்பனா சாவ்லா - மருத்துவர் சண்முகப்பிரியா

கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. சண்முக பிரியாவின் கணவர் சண்முக பெருமாள் இந்த விருதினை பெற்றுக் கொண்டார். பெற்றார். துணிச்சலான மருத்துவ சேவைக்கான இந்த விருது வழங்கப்பட்டது.

அப்துல் கலாம் விருது

பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசியர் லட்சுமணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவிக்கப்ட்டது. 

சிறந்த மூன்றாம் பாலினத்தவருக்கான விருது திருநங்கை கிரேஸ் பானுவுக்கு வழங்கப்பட்டது. 

ஔவையார் விருது

சமூக சேவைக்கு சிறந்த தொண்டாற்றியதற்காக டாக்டர் சாந்தி துரைசாமிக்கு ஔவையார் விருது வழங்கப்பட்டது. 

நல் ஆளுமை விருது

3 பேருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. சென்னை மாநில கல்லூரிக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், நில நிர்வாக ஆணையர் ஜெ.பார்த்திபனுக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

சிறந்த சேவைக்கான விருது

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள், நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருச்சி ஹோலி கிராஸ் தொண்டு நிறுவனத்துக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. 

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்ததற்காக மருத்துவர் விருது சென்னை பத்மபிரியாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் விருது நெல்லையை சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை, சாயல்குடி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. 

சிறந்த நகராட்சிகளுக்கான விருது

உதகை (முதல் பரிசு), திருச்செங்கோடு (2-ம் பரிசு) , சின்னமனுருக்கு (3-ம் பரிசு) சிறந்த நகராட்சிகளுக்கான விருது வழங்கப்ட்டது. சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூருக்கு விருது வழங்கப்பட்டது. 

இது தவிர சாதனை புரிந்த பல்வேறு தரப்பினருக்கு விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழா நடத்தப்பட்டது. விழாவில் மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

சுதந்திர தின விழாவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கோட்டை பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சுதந்திர தினவிழா  முழு வீடியோ தொகுப்பு  காணுங்கள்:



No comments

Thank you for your comments