Breaking News

அன்று தந்தை வாங்கிக் கொடுத்த உரிமை.. சுதந்திர உரையில் நினைவுபடுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 

இந்தியாவின் அனைத்து முதல்வர்களுக்கும் இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் சுதந்திர சிந்தனையாளர் கருணாநிதி. இந்தியாவில் எத்தனையோ முதல்வர்கள் வந்தாலும் முதல்வர்கள் கொடியேற்றலாம் என்னும் உரிமையை பெற்று தந்தவர் முத்தமிழறிஞர் கருணாநிதி  என்று சுதந்திர உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுபடுத்தி உரையாற்றினார்.

சுதந்திர தினத்தன்று மாநில தலைநகரங்களில் ஆளுநர்களே கொடியேற்றி வந்த நிலையில் முதல்வர்களும் கொடியேற்ற வேண்டும் என்ற உரிமையை கருணாநிதி வாங்கிக் கொடுத்த நிலையில் இன்றைய தினம் அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக மூவர்ணக் கொடியை கொடியேற்றுகிறார்.


இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. அதன்படி இன்றைய தினம் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். 

குடியரசு தினம் என்றால் செங்கோட்டையில் குடியரசுத் தலைவரும் சுதந்திர தினம் என்றால் பிரதமரும் கொடியேற்றி வருகிறார்கள். அது போல் மாநில தலைநகரங்களில் இரு தினங்களிலும் அந்தந்த மாநில ஆளுநர்களே கொடியேற்றி வந்தனர்.

இந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி சுதந்திர தின விழாக்களில் மாநில தலைநகரங்களில் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையேற்ற மத்திய அரசு, குடியரசு தினங்களில் மாநில தலைநகரங்களில் ஆளுநர்களும், சுதந்திர தின விழாக்களில் மாநில தலைநகரங்களில் மாநில முதல்வர்களும் கொடியேற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டது. 



இதையடுத்து தலைமைச் செயலகத்தில் கடந்த 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல்வர் கருணாநிதி தேசியக் கொடியை முதன் முறையாக ஏற்றினார்.

சுதந்திர தினத்தன்று முதல் முறையாக தேசியக் கொடியை கருணாநிதி ஏற்றினார். இதையடுத்து 50 ஆவது சுதந்திர தினத்தன்றும் கருணாநிதியே தேசியக் கொடியை ஏற்றினார். 

தற்போது 75 ஆவது சுதந்திர தின விழாவில் கருணாநிதியின் மகனும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் கொடியேற்றினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றை சுதந்திர உரையில், தந்தை வாங்கி கொடுத்த உரிமை நினைவு படுத்தி உரையாற்றினார். 

அவர் ஆற்றிய உரையில்,  75-வது சுதந்திர தூண் கல்லாலும், மண்ணாலும் உருவானதல்ல. பல்வேறு தியாகிகளின் ரத்தத்தாலும், சதையாலும் உருவானதாகும்.

இந்தியாவின் அனைத்து முதல்வர்களுக்கும் இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் சுதந்திர சிந்தனையாளர் கருணாநிதி. இந்தியாவில் எத்தனையோ முதல்வர்கள் வந்தாலும் முதல்வர்கள் கொடியேற்றலாம் என்னும் உரிமையை பெற்று தந்தவர் முத்தமிழறிஞர் கருணாநிதி. 

திராவிடக் கட்சியின் ஆணிவேரான நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த நூற்றாண்டு இந்த ஆண்டாகும். மகாகவி பாரதிக்கும் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.

சீன போரின் போது இந்திய நாட்டிற்காக நிதி திரட்டி கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா.  பாகிஸ்தான் போரின் போது இந்தியாவுக்காக நிதி திரட்டியவர் கருணாநிதி. கார்கில் போரின் போது 3 தவணைகளாக நிதி திரட்டி கொடுத்தவரும் கருணாநிதிதான். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டும்.

இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டை நாம் மாற்றியுள்ளோம். திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம்  என்று பெருமிதமாக உரையாற்றினார். 

கடந்த மூன்று நாட்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொன்னான நாள் என்றுதான் சொல்ல வேண்டும். கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவை. 

நேற்று முன் தினமும், நேற்றும் சிறப்பான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்ததை அடுத்து பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்றைய தினம் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன நிலையில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணையின் கீழ் பணிநியமன ஆணைகள் நேற்று வழங்கி உள்ளார்.

இன்றைய தினம் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார்.

சுதந்திர தினவிழா  முழு வீடியோ தொகுப்பு  காணுங்கள்:




No comments

Thank you for your comments