Breaking News

அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்... விசாரணை வளையத்தில் ....

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக்கொண்டே அலட்சியமாக செவிலியர் ஒருவர் நோயாளிக்கு ஊசி செலுத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி  வருகின்றன.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்


இந்த நிலையில் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே ஊசி செலுத்தி உள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட செவிலியரிடம் தலைமை மருத்துவர் எழில் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments

Thank you for your comments