Breaking News

கொரோனா மருத்துவ கழிவுகள்.. சாலையோரம் வீசி சென்ற மருத்துவக் குழுவினர்... தொற்று நோய் பரவும் அபாயம் ..!



விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் கொரோனா ஊசி மருத்துவ கழிவுகளை  மருத்துவ குழுவினர் சாலையோரம் வீசிச் சென்றதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசும், மத்திய அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு தடுப்பூசி முகாம் விருத்தாசலத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் மருத்துவ குழு மருத்துவர் விஜயவதி, செவிலியர் இந்துமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு  கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினார்கள்.

இதனையடுத்து, கொரோனா தடுப்பூசி மருத்துவ குழு,  மருத்துவ கழிவுகளை சாலையோரம் வீசி சென்றதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டியதால்,  பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  



இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக  நடவடிக்கை எடுத்து, அந்த மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுபோன்ற தவறுகள் இனி நடக்காதவாறு பொது மக்களை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



No comments

Thank you for your comments