Breaking News

சுதந்திர தின விழா - தேசியக் கொடி ஏற்றி வீரவணக்கம்...

 

 காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் ஏபிடிஓ நந்தகுமார், மேலாளர் சதீஷ்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘


காட்பாடி அடுத்த மெட்டுகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற எழுத்தர் சரவணன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘


காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.அருள்தாஸ் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘


காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் ஆதிசிவம் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘


பாஜக மாநில தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள அண்ணாமலை முதல் முறையாக நேற்று வேலூருக்கு வருகை தந்தார். அவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து  தெரிவித்தும், சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்திய பாமக வேலூர் மாநகர அமைப்பு செயளாளர் சீ.நாயுடு பாபு.

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘


வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 5 நிமிடத்தில் ஒரே நேரத்தில் 75 தேசிய கொடிகளை ஏற்றி வைத்து வேலூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதி.சிவா, சரவணன் தலைமையிலான குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

பிடிஓ அலுவலகத்தில்  சுதந்திர தின விழா!

வேலூர் :

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒன்றிய ஆணையாளர் ஜி .ஹேமலதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.


பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ஒன்றிய ஆணையாளர் ஜி .ஹேமலதா. தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, ராஜபத்ரி, மனோகரன், பிரதீப்குமார், பாரிபிரபு, மேலாளர் மீனா, ஊராட்சி செயலாளர் ஏ. மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘


 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு காட்பாடி வருவாய் ஆய்வாளர் தீனதயாளன் காட்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அருகில் காட்பாடி விஏஓ அருண்குமார்.

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.  கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள், போலீசார், தேர்தல் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள்,  காவல்துறையினர் உட்பட 202    பேர்களுக்கு ஆட்சியர் நற்சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.  காவல் துறை கண்காணிப்பாளர்  பத்ரி நாரயாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்கபட்டது.


⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘


75 வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக நாகர்கோவிலில் அமைந்துள்ள  ஊர்காவல் படை  அலுவலகத்தில் வைத்து ஊர்காவல் படை குமரிமாவட்ட உதவி சரக கமாண்டோ ஜெனரல் பிரகாஷ் குமார்  தலைமையில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி  இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் ஊர்காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

ரூ 38 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

ராணிப்பேட்டை :

ராணிப்பேட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில் 38 லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நேற்று விமரிசையா£க கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்சன் புஷ்பராஜ் தேசியக் கொடி ஏற்றி வைத்து 150 பேருக்கு 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் ஆற்காடில் வசிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி லோகநாதன் என்பவருக்கு ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கதர் ஆடை போர்த்தி கவுரவித்தார்.

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

No comments

Thank you for your comments