Breaking News

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

 காஞ்சிபுரம் :

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் தேசிய கொடியை ஏற்றி  வைத்து மரியாதை செலுத்தினார்.


இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு   காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.அதையொட்டி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் 

தேசிய கொடியை ஏற்றி  வைத்து மரியாதை செலுத்திய பின்னர் ஏழை எளிய பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் காஞ்சி மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன்,நகர செயலாளர் சன்பிரான்டு கே.ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.


No comments

Thank you for your comments