அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் -கமல்ஹாசன் பாராட்டு
சென்னை:
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு:
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.
இவ்வாறு, மநீம தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 18, 2021

No comments
Thank you for your comments