Breaking News

சட்டசபையில் உதயநிதி கன்னி பேச்சு... வெட்கத்தில் திளைப்பு..

சட்டப்பேரவையில்  முதன்முதலாக தன்னுடைய கன்னி பேச்சை  உதயநிதி ஸ்டாலின் பதிவு - முழு வீடியோ தொகுப்பு

சென்னை, ஆக.18-

முதன்முதலாக தன்னுடைய கன்னி பேச்சை சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் இன்று (18-08-2021) பதிவு செய்தார்.. அப்போது உதயநிதி, தமிழக அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகளையும் விடுத்தார்.


சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்,  பேரவையில் கன்னி பேச்சு உரையாற்றினார்.. 

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  முத்தமிழறிஞர் கலைஞர் மூவரையும் வணங்கி என்னுடைய இந்த கன்னிப் பேச்சை இந்த அவையிலே பதிவு செய்கின்றேன்.

சட்டமன்றஉறுப்பினர் உதயநிதியின் கேள்விக்கு
 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை...  
உதயநிதி வெட்கத்தில் நாக்கை சுழற்றி புன்முருவல் -முழுவீடியோ தொகுப்பு


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

பாரம்பரியமும், பெருமையும் மிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசுவதற்கான   வாய்ப்பை வழங்கிய உங்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


அவை முன்னவர்  தொடங்கி, அமைச்சர்கள் கழக உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர்கள் இந்த நேரத்தில் நமது கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த தோழமைக் கட்சித் தலைவர்கள் நம்முடைய ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அண்ணன் முத்தரசன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பெரியவர் காதர் முகைதீன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் அண்ணன் அவர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் உட்பட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

தன்னுடைய வெற்றிக்காக உதவிய தலைவர்கள், மா.செ.க்கள் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றியை தனித்தனியாக உரித்தாக்கினார். திமுக கூட்டணி கட்சி தலைவர்களது ஒவ்வொருவர் பெயரையும் கூறி நன்றியினை தெரிவித்தார். எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்  அவர்களுக்கு நன்றியை தெரிவிக்க இருந்தேன் என்று கூறினார்... 


மேலும் பல்வேறு விஷயங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பியதுடன் மிக முக்கியமான தமிழக பிரச்சனைகள் குறித்தும் பேசினார்.. அத்துடன் ஆளும் அரசுக்கு சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.. 

அதாவது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரை வணங்கி எனது முதல் சட்டப்பேரவை உரையை தொடங்குகிறேன்.. முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் இருந்த அன்பில் தர்மலிங்கம் தாத்தா, அன்பில் பொய்யாமொழி மாமா, அவருக்கு பிறகு, இன்று என்னுடைய நண்பனாக, தேர்தல் பணி, கழக பணி என்று தோளோடு தோள் நிற்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..


ஜெயலலிதா அம்மையார் மறைந்தவுடன், தலைவர் நினைத்திருந்தால், என்றோ ஆட்சி அமைத்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயக வழியில் மக்களை சந்தித்து, மக்களின் வாக்குகளை பெற்றுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தலைவர் பொறுமை காத்தார்..

அண்ணா நினைவிடத்துக்கு அருகாமையில், தன்னுடைய நினைவிடமும் அமைய வேண்டும் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கடைசி ஆசையைகூட நிறைவேற்ற விடாமல் அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டது.. தலைவர் அப்போது ஒரு சிறு கண்ணசைவு காட்டியிருந்தால்கூட, அன்று நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.. ஆனால், தலைவர் அப்படி செய்யவில்லை.. சட்டப்போராட்டம் நடத்தி, கலைஞரின் விருப்பத்தையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிறைவேற்றினார்.

தமிழகத்தில் கடைகோடி மனிதனுக்கு ஒரு பிரச்சனை என்றாலும், ஒட்டுமொத்த தமிழகத்துக்கே பிரச்சனை என்றாலும் முதல்வர் அதில் கவனம் செலுத்தி தீர்வு கண்டு வருகிறார்.. உதாரணத்துக்கு நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மித்ராவின் அறுவை சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் தேவை என்றதும், அதற்காக உதவ வேண்டும் என்றும் மருத்துவ சிகிச்சைக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஒரு கோரிக்கை வைத்தார்... இறுதியில் பலரும் நிதி அளித்ததாலும், ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டதாலும், மருந்து கிடைத்து, மித்ராவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.

சேப்பாக்கம் தொகுதியின் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற பெண்களுக்காக பெண்களே இயக்கும் கூட்டுறவு கடன் சங்க வங்கிகளை ஏற்படுத்த வேண்டும்.. சேப்பாக்கம் 4 இடங்களில் கட்டப்படவுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர்-மாண்புமிகு முதல்வரின் பெயர்களை சூட்டி, அவர்களின் பொதுவாழ்வை பிரதிபலிக்கும் வகையில் அவற்றை வடிவமைக்க வேண்டும்.

கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரத்துக்கு என்று எந்த ஒரு திட்டமும் அவர்கள் செயல்படுத்தவில்லை.. இந்த சூழலில் முதல்வர், அன்று மேயராக இருந்தபோது அறிமுகப்படுத்திய சிங்கார சென்னை திட்டமானது, தற்போது சிங்கார சென்னை 2.0 ஆக செயல்பட போகிறது.. சென்னையில் இனி இது மேலும் எழில்நகராமாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரத்துக்கு என்று எந்த ஒரு திட்டமும் அவர்கள் செயல்படுத்தவில்லை.. இந்த சூழலில் முதல்வர், அன்று மேயராக இருந்தபோது அறிமுகப்படுத்திய சிங்கார சென்னை திட்டமானது, தற்போது சிங்கார சென்னை 2.0 ஆக செயல்பட போகிறது.. சென்னையில் இனி இது மேலும் எழில்நகராமாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும். இதில் கட்சி பேதம் எதுவுமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும்.

கொரோனாவை விரட்டுவதில் ஒன்றிய நரேந்திர மோடி அரசு மூட நம்பிக்கையுடன் செயல்பட்டது. ஒன்றிய அரசு எதைச் சொன்னாலும் அதை அப்படியே செய்யும் அடிமை அதிமுக அரசு, ஒன்றிய அரசு கூறியதை போல் மணியடித்தது, கைத்தட்டி, ஒலியெழுப்பி கொரோனாவை விரட்டியதாக எண்ணி மூட நம்பிக்கையுடன் செயல்பட்டன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. ஆனால் தற்போதைய கழக அரசு விழிப்புடன் செயல்பட்டது.

புற்று நோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.. அயோதிக்குப்பம், நடுக்குப்பம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்திற்கு பெண்களுக்கு என தனி கூட்டுறவு வங்கியை உருவாக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இலவச தொலைக்காட்சியை. கலைஞர் தொலைக்காட்சி என்றுதான் சொல்லி வந்தார்கள்.  திமுக வந்தவுடன் மாநகர பேருந்து பெண்கள் இலவசமாக செல்வதால் தற்போது ஸ்டாலின் பேருந்து என்று தற்போது சொல்லி வருகிறார்கள்.

சட்டப்பேரவை நடவடிக்கைகளை இதுநாள் வரை ஒரு பார்வையாளனாக மட்டுமே கவனித்து வந்த நான், முதல் முறையாக ஒரு பங்கேற்பாளனாக அவையிலிருந்து செயலாற்றும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளேன். பாரம்பரியமிக்க இந்த அவையில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுவேன்" என்றார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "எனக்கு முன்னால் கன்னிப்பேச்சை, பல வினாக்களை தொடுத்து, கோரிக்கைகளையும் வைத்து மாண்புமிகு உறுப்பினர் உதயநிதி அவர்கள் பேசியிருக்கிறார்கள்.. எனவே, அவர் முன்வைத்த பிரச்சனைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, அதற்குரிய விளக்கங்கள் தரலாம்..

ஆனால், மிக முக்கியமான பிரச்சனை நீட்.. அதை அழுத்தமாக அவர் குறிப்பிட்டு சொன்னார்.. நீட்டை பொறுத்தவரை கட்சி பாகுபாடுகளை மறந்து எல்லாரும் ஒன்று சேர்ந்து அதற்காக குரல் கொடுக்க வேண்டும்.." என்றார். ஸ்டாலின் உதயநிதியின் பெயரை குறிப்பிட்டு இப்படி பேசியதுமே, பின்சீட்டில் உட்கார்ந்திருந்த உதயநிதி வெட்கப்பட்டு சிரித்தார்.. அதை பார்த்து அவருக்கு அருகில் இருந்தோரும் புன்முறுவல் பூத்தனர்...!


No comments

Thank you for your comments