Breaking News

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்... போற்றும் பெற்றோர்கள்

கடலூர்:

அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜெய்சங்கர் என்பவர், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, பாடம் நடத்தி வருவது கிராம மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பெற்றோர்கள் போற்றுகின்றனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த தீவளூரில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கையால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்.  ஆன்லைன் வகுப்புகள் துவங்கினாலும், பலரது வீட்டில் மொபைல் போன் வாங்குவது கேள்விக்குரியனா ஒன்றே. 

இந்நிலையில், அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜெய்சங்கர் என்பவர், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, பாடம் நடத்தி வருவது கிராம மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இதுகுறித்து ஆசிரியர் ஜெய்சங்கர் கூறுகையில், 

தற்போது ஊரடங்கால் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு, தீவளூர், சாத்துக்கூடல், உச்சிமேடு, இளமங்கலம், தாழநல்லுார் கிராமங்களுக்கு நேரடியாக சென்று கிராமங்களில் உள்ள பொது இடங்களில் அமர வைத்து பாடம் நடத்திவருகிறேன். 

தற்போது 70 மாணவர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மேலும், கல்வித் தொலைக்காட்சியை பார்க்கிறார்களா என்றும் விசாரிக்கிறேன். மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்துவது மன ஆறுதலாக உள்ளது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

No comments

Thank you for your comments