அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் ஆய்வு
தருமபுரி :
இலங்கை தமிழகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் ஆய்வு நடைபெற்றது.
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இலங்கை தமிழகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக துணை இயக்குநர் கி.ரமேஷ் மற்றும் கண்காணிப்பாளர் சி. அசோக்குமார் ஆகியோர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 இலங்கை அகதிகள் முகாம்களில் 5.8.2021 மற்றும் 6.8.2021 ஆகிய இரு நாட்களில் நேரில் ஆய்வு செய்தனர்.
மேற்கண்ட 8 இலங்கை அகதிகள் முகாம்களிலும் புதியதாக கட்டப்படவேண்டிய வீடுகள், பழுதடைந்த வீடுகள் சீர் செய்தல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார மற்றும் கல்வி வேலைவாய்ப்பு விவரங்களை இலங்கை அகதி முகாமில் வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

No comments
Thank you for your comments