காட்டு பகுதியில் அழுகிய நிலையில் நிர்வாணமாக சடலம் ... போலீசார் தீவிர விசாரணை
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் முகவரி தெரியாத ஆண் சடலம், அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடப்பதாக சேப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கலையரசனுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி, காலை எட்டு மணிக்கு தகவல் கிடைத்தது
தகவலின்பேரில் நேரில் சென்று பார்த்த விஏஒ, கலையரசன், வேப்பூர் காவல் நிலையத்திற்கு அழுகிய ஆண் சடலம் கிடப்பதாக புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரா மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் நிர்வாணமாக கண்டெடுக்கபட்டதில் கை விரல் நகங்கள், தலை முடி ஆகியவை நீளமாக இருப்பதாலும், உடலில் காயம் ஏதும் இல்லாததால் ஆதரவற்றோராக இருக்கலாமா...? அல்லது கொலையா இருக்கலாமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்
No comments
Thank you for your comments