Breaking News

குடமுழுக்கு பணிக்காக ரூ.2 லட்சம் வழங்கிய திமுக எம்எல்ஏ...!

சென்னை:

திருக்கோயில் குடமுழுக்கு பணிக்காக ரூபாய் இரண்டு லட்சம் வழங்கிய திமுக எம்எல்ஏ சங்கர்.  


சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி 6 வது வட்டம் சிவசக்தி நகரில் அமைந்துள்ளது அருள்மிகு சிவ சக்தி அம்மன் ஆலயம். 

மிகவும் சகத்தி வாய்ந்த இந்த கோவிலில் அப்பகுதி மக்கள் திரளாக வந்து வணங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த  ஆலயத்திற்கு விரைவில் குடமுழுக்கு நடத்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் தீர்மானித்தனர்.  இதனையடுத்து குடமுழுக்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தகவல் அறிந்த திருவெற்றியூர் திமுக  சட்டமன்ற உறுப்பினர் சங்கர் அவர்கள்  கோயில் குடமுழுக்கு மற்றும் திருப்பணிக்காக ரூபாய் 2 லட்சத்தை கோயில் நிர்வாகிகளிடம்  வழங்கினார்.  

அப்போது தியாகி சத்தியமூர்த்தி நகர் தலைவரும் 6-வது வட்ட  பிரதிநிதி மகேந்திரன்,  தியாகி சத்தியமூர்த்தி நகர் ஒருங்கிணைப்பாளர் எம் கார்த்தி உள்ளிட்டோர் உடன்  பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments