இன்டியா இன் மை டிரீம்ஸ்... மாணவர்களுக்கு போட்டி-பரிசளிப்பு!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக நிர்வாகம் 75வது சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இன்டியா இன் மை டிரீம்ஸ் எனும் தலைப்பிலும், கொரோனா பேரிடர் சார்ந்து கோவிட் விழிப்புணர்வு என்ற தலைப்பிலும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தியது.
இப்போட்டிகளில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அங்கம்பாக்கம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சுதந்திர தினப் பேச்சுப்போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி ச. அரிணி முதல் பரிசையும், கொரோனா விழிப்புணர்வு போஸ்டர் உருவாக்கும் போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.சுஜிபாலா முதல் பரிசையும் பெற்றார்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில் காஞ்சி மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், மாவட்டக்கல்வி அலுவலர் எல்லப்பன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காந்திராஜன், தலைமையாசிரியர் தணிகைஅரசு, பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்..

No comments
Thank you for your comments