கேட்பாரற்று நிற்கும் செய்தி மக்கள் தொடர்பு பிரசார வாகனம்
காட்பாடி அடுத்த கல்புதூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் பிரசார வாகனம் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
வளர்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணியளவில் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள ஸ்ரீ கபால பைரவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6:00 மணியளவில் ஸ்ரீ கபால பைரவருக்கு ரத்த அபிஷேகம், இறைச்சி யாகமும் நடைபெற்றது. இந்த பூஜையில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு ஸ்ரீகால பைரவரின் அருளைப் பெற்றனர். பூஜையை ஸ்ரீஅகோரி ராம்ராஜ் செய்திருந்தார்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
கூழ்வார்த்தல் திருவிழா!
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி திருவள்ளுவர் நகரில் 75ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 13ம் தேதி காலை 9:00 மணி அளவில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பிற்பகல் 1:00 மணியளவில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடைபெற்றது. தொடர்ந்து அன்று மாலை 5:00 மணி அளவில் பொங்கலிடும் நிகழ்ச்சியும், இரவு 10 மணியளவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் கிராம நிர்வாகிகள் கே. குமரேசன், டி.என். ஜெயகாந்தன், எம்.கிருஷ்ணமூர்த்தி, என்.தமிழரசன், எஸ்.பாலாஜி, இ.சுரேஷ், எம்.விஜய். மற்றும் கிராம இளைஞர்கள் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. காட்பாடி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
சனிக்கிழமை அன்று தர்மபுரி மாவட்டம் ADONAI SPORTS ACADEMY சார்பாக ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து வறுமையில் வாடும் தெருக்கூத்து கலைஞர்கள் சுமார் 60 பேருக்கு 900 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த உதவியினை ஜேம்ஸ் வசந்த் , செல்வீன் ஜேம்ஸ் சார்பாக- முத்துக்குமார் தர்மபுரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மூக்குத்தி முருகன், செந்தில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிங்காரவேலன் பொறியாளர் ஆகியோரின் முன்னிலையில் வழங்கப்பட்டது.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
காட்பாடி அருகே மீண்டும்
கொரோனா பரிசோதனை!
வேலூர்:
தமிழக - ஆந்திர மாநில எல்லையான காட்பாடி அருகே மீண்டும் கொரோனா பரிசோதனை தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதையடுத்து வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூர், திருப்பதி, திருமலை, காளஸ்திரி பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இரு மாநில அரசு, தனியார் பஸ்கள் அந்தந்த மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. வேலூரில் இருந்து சித்தூருக்கு செல்லும் பஸ்கள் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வரை இயக்கப்படுகின்றன. அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்று ஆந்திர மாநில பஸ்களில் பயணிகள் செல்கின்றனர். தற்போது இரு மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநில எல்லையை கடந்து செல்பவர்களுக்கு நேற்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனைக்கு மறுப்பவர்கள் திருப்பியனுப்ப படுகின்றனர். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனால் காவல் துறை சார்பில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு 8 மணி நேரமும் டீ, காபி, பிஸ்கெட் சாப்பிட்டு விட்டு நேரத்தை கழித்து விட்டு சென்ற வண்ணம் உள்ளனர். திருவலம் மற்றும் காட்பாடி காவல் நிலையங்களில் இருந்து மட்டுமே இந்த கொரோனா சோதனை சாவடி பணிக்கு போலீஸார் வருகின்றனர்.
விருதம்பட்டு காவல் நிலையத்தில் இருந்து எந்த போலீஸாரும் பணிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இரவு ரோந்து என்ற பெயரில் விஷ்ணு திரையரங்கம் எதிரில் பேரி கார்டுகள் அமைத்து வாகன தணிக்கையில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர். இரவு ரோந்து என்று தெருத்தெருவாக காவலுக்கு செல்வதில்லை. கொரோனா சோதனைச் சாவடி பணிக்கும் செல்வதில்லையாம். இப்படி ஒரு சட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது.




No comments
Thank you for your comments