மலை ஆக்கிரமிப்பை விரைவாக அகற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் இந்து முன்னணி சார்பில் அச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பை விரைவாக அகற்ற கோரி காஞ்சிபுரம் கோட்டம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோட்ட செயலாளர் ஆர்.டி. மணி தலைமையில் அச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பை விரைவாக அகற்றக்கோரி காஞ்சிபுரம் கோட்டம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் 700 அடி உயரத்தில் இயற்கை வளத்துடன் கூடிய அழகிய வஜ்ரகிரிமலை 1800 வருடங்களுக்கு முன் சோழர் காலத்தில் ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயம் மாலிக்காபூர் படையெடுப்பின் போது உடைக்கப்பட்ட பழமையான ஆலயம் இம்மலையில் அபூர்வ மூலிகை செடிகள் மற்றும் ஏராளமான மரங்கள் கொண்டு இயற்கை வளத்துடன் வனவிலங்குகளும் காணப்பட்டன.
சப்தகன்னிகளுக்கு கோயிலும் நம் தமிழர்களின் பண்டைய நாகரிக வரலாற்றுச் சின்னமாக இருந்தது இம்மலையில் அகழ்வாராய்ச்சி நடத்தி அக்காலத்திய காசுகள், பாண்டங்கள் கிடைக்கப்பெற்றன.
மலையின் சிறப்பு அவ்வையார் காலடித் தடமும், அகஸ்தியர் வந்துள்ளதும், நால்வர் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கி வந்தன.
வரலாற்று சின்னத்தை அழிக்க கிறிஸ்தவ பாதிரிகள் மலை உச்சியில் சிலுவை நட்டு பின்னர் மரியே வாழ்க என்று சுண்ணாம்பில் எழுதி சில வருடங்கள் கழித்து கிராம தேவதை இருக்கும் இடத்தில் குருசடி கட்டினர் இவ்விடத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதி இன்றி பல கட்டிடங்களும் கட்டப்பட்டதாக பொதுமக்களும் பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அன்றைய தாசில்தார் கட்டிடம் கட்ட தடை விதித்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மறுபடியும் தொடர்ந்து கட்டிடம் கட்டுவதை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
பாறைகளை உடைத்து சிலுவை நட்டு மரங்களையும் அபூர்வ தாவரங்களையும் அழித்து பல கட்டிடங்களையும் அத்துமீறி நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை போட்டு இயற்கைவளம் மரபுச் சின்னம் அளிக்கப்பட்டுள்ளது அரசு அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இயற்கைவளம் அழிப்பு அனுமதியின்றி கட்டிடம் கட்டுவது மலை அத்துமீறி ஆக்கிரமிப்பு ஆகியவற்றை பாதிரியார்கள் ஒப்புக்கொண்டு இனிமேல் எவ்விதமான கட்டுமானப் பணியும் செய்ய மாட்டோம் என்று அதிகாரிகள் முன்பு உறுதி அளித்தனர்.
பொதுமக்களின் பல கோடி பெறுமானமுள்ள பல ஏக்கர் நிலம் இயற்கை வளம் அபூர்வ தாவரங்கள் பண்டைத் தமிழர் நாகரிகம் வரலாற்று சின்னம் அகழ்வாராய்ச்சி இடம் அழிப்பு அரசுக்கு வருவாய் இழப்பு என பல்வேறு கோணங்களில் கிறிஸ்துவ அமைப்பினரின் பணபலத்திற்கும் ஆள்பலத்திற்கும் பயந்து அவர்களுக்கு உடந்தையாக அரசு அதிகாரிகளும் மின்சாரம் வழங்கி திருட்டு மின் விளக்குகள் அமைக்கப்பட்டும் மலை முழுவதும் சிலுவைகள் நடப்பட்டும் இரவோடு இரவாக சுற்றி தடுப்பு சுவர் எழுப்பி ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயம் மறைக்கும் வண்ணம் அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் இதுகுறித்து மாவட்டம் தழுவிய இந்து முன்னணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை இந்து முன்னணி கோட்ட செயலாளர் ஆர் டி மணி, சிறப்புரை ஆர்எஸ்எஸ் விபாத் தலைவர் ராம.ஏழுமலை, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சனில்குமார், சிறப்பு விருந்தினர் பாஜக மாவட்டத் தலைவர் கே எஸ் பாபு, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.சந்தோஷ் மற்றும் பாஜக மாவட்ட, நகர நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 300ற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments