அகதிகள் முகாம் இனி மறுவாழ்வு மையம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை:
இலங்கை தமிழ் அகதிகள் என்று கூறாமல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகம் என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28-8-2021) சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன்,
அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர் நலனுகாக நேற்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டி பேசினார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் முகாம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் எனக் கூறாமல் 'இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்' என அழைக்கப்படும் .
இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல; நாம் இருக்கிறோம் அவர்களுக்கு துணையாக.
எனவே, அந்த உணர்வோடு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.

No comments
Thank you for your comments