Breaking News

சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க சட்டசபையில் கோரிக்கை - பாமக

சென்னை:

சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் பாமக எம்எல்ஏ சதாசிவம் இன்று வலியுறுத்தினார். 


தமிழக சட்டசபையில் வேளாண்மை மீன்வளம் பால்வளம் மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய பாமக உறுப்பினர் சதாசிவம், தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்று, சேலம் 11 சட்டமன்றங்களை கொண்ட மாவட்டம், சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் அதில் மேட்டூர், எடப்பாடி , சங்ககிரி ஒமலூர் போன்ற நகரங்களை இடம் பெற செய்ய வேண்டும் என பாமக எம்எல்ஏ சதாசிவம் கேட்டுக்கொண்டார்,

No comments

Thank you for your comments