Breaking News

கொரானா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் வாயிலாக பெற வழி- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

புதுடெல்லி :

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் பெற எளிய வழி ஒன்று மத்திய சுகாதார அமைச்சகம்   அறிவித்துள்ளது .


மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாந்தவியா ட்விட்டர் பதிவு ஒன்றில் வெளியிட்ட  தகவலாவது, 

+91 9013151515 என்ற எண்ணை உங்கள் கான்டாக்ட் எண்களுடன் பதிவு செய்து கொள்ளவும். அந்த எண்ணை வாட்ஸ்அப்பில் ஓப்பன் செய்யவும்.

Covid certificate (கோவிட் சர்டிபிகேட் ) என்று கம்போஸ் செய்து அனுப்பவும். 

அதற்கு பதிலாக OTP அனுப்பப்படும்.

அந்த ஓடிபி யை பதிவு செய்தால் சான்றிதழை சில விநாடிகளில் பெறலாம்.

இவ்வாறு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments