Breaking News

ரூ.19,500 கோடி நிதி உதவி விவசாயிகளுக்கு வழங்கல் - பிரதமர் மோடி

புதுடெல்லி:

பிரதமரின் கிசான் சம்மான் நிதி  திட்டத்தின் கீழான நிதியுதவியின் 9வது தவணைத் தொகை 19 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பயனாளிகளுக்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அளித்தார்.

The Prime Minister, Shri Narendra Modi interacts with the farmer beneficiaries during the release of the 9th instalment of financial benefit under Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) scheme, through video conferencing, in New Delhi on August 09, 2021.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019ம் ஆண்டில், 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தை அமல்படுத்தியது.  இந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 8 தவணைகளில், 1.38 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 9வது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக விடுவித்தார்.  9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட உள்ளது.   நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் கலந்துரையாடிய பின், நாட்டு மக்களிடமும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் போது, விவசாய பயனாளிகளிடம் பிரதமர் கலந்துரையாடியதாவது, 


இந்நிகழ்ச்சியின் போதுவிவசாய பயனாளிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார். இதன் மூலம் 9.75 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்குரூ.19,500 கோடிக்கும் மேற்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ்இது 9வது தவணை நிதியுதவி ஆகும்.

 இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் இடையே விதைப்பு காலம் பற்றி பேசிய பிரதமர்இன்று பெறப்பட்ட தொகை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.  ரூ.1 லட்சம் கோடி தொகுப்பிலான கிசான் உள்கட்டமைப்பு நிதி திட்டம்இன்று ஓராண்டை நிறைவு செய்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.  இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு கடைகளில் தேன் மற்றும் குங்குமப் பூ விற்பனை திட்டம் குறித்தும் பிரதமர் பேசினார்.  தேன் திட்டம்ரூ.700 கோடி  ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளதுஇதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

The Prime Minister, Shri Narendra Modi releases the 9th instalment of financial benefit under Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) scheme, through video conferencing, in New Delhi on August 09, 2021.

வரவிருக்கும் 75வது சுதந்திர தினத்தை குறிப்பிட்ட பிரதமர்இது பெருமிதமான தருணம் மட்டும் அல்லபுதிய தீர்மானங்களுக்கான வாய்ப்பு என கூறினார். வரும் 25 ஆண்டுகளில்இந்தியாவை நாம் எங்கே பார்க்க விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்கநாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2047-ம் ஆண்டு 100வது சுதந்திர தினத்தை நாடு நிறைவு செய்யும்போதுஇந்தியாவின் நிலையை தீர்மானிப்பதில்நமது வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என பிரதமர் குறிப்பிட்டார்.  புதிய சவால்களை சந்திக்கவும்புதிய சந்தர்ப்பங்களின் சாதகத்தை எடுத்துக் கொள்ளவும்இந்திய வேளாண்மைக்கு வழிகாட்ட இதுதான் சரியான நேரம்.  மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்பஇந்திய விவசாயத்தில் மாற்றங்கள் தேவை என அவர் கூறினார்.

பெருந்தொற்று காலத்தில்உற்பத்தியில் வரலாறு படைத்ததற்காக விவசாயிகளை அவர் பாராட்டினார். இந்த சிக்கலான நேரத்தில்விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை அவர் சுட்டிக் காட்டினார்.   விதைகள்உரங்களின் தடையற்ற விநியோகம் மற்றும் சந்தைகளுக்கான அணுகலை அரசு உறுதி செய்தது. யூரியா ஆண்டு முழுவதும் கிடைத்தது மற்றும் சர்வதேச சந்தையில் டிஏபி உரங்களின் விலை பல மடங்கு அதிகரித்தபோதும்அரசு உடனடியாக ரூ.12,000 கோடி மானியத்தை  ஏற்பாடு செய்தது. இதனால் இந்த சுமையை விவசாயிகளால் உணரப்படவில்லை.

காரிப் அல்லது ராபி சந்தை பருவமாக இருக்கட்டும்குறைந்தபட்ச ஆதரவு விலையில்விவசாயிகளிடமிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கொள்முதலை  அரசு செய்துள்ளது என பிரதமர் கூறினார்.  இதன் காரணமாகசுமார் ரூ.1,70,000 கோடி நெல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சென்றுள்ளதுசுமார் ரூ.85,000 கோடி கோதுமை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக சென்றுள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பருப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோதுஅவற்றின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளிடம் வலியுறுத்தியதை பிரதமர் நினைவுப்படுத்தினார்.  இதன் காரணமாககடந்த 6 ஆண்டுகளில்நாட்டில் பருப்பு உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 

தேசிய சமையல் எண்ணெய் திட்டம் - பாமாயில்-ஐ சுட்டிக் காட்டிய பிரதமர்சமையல் எண்ணெய் உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய எடுத்த உறுதிமொழிதான் தேசிய சமையல் எண்ணெய் திட்டம்-பாமாயில் என கூறினார்.  இன்றைய வரலாற்று சிறப்புமிக்க நாளில்,  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைநாடு நினைவுக் கூறுகையில்இந்த தீர்மானம்நமக்கு புதிய சக்தியை அளிக்கிறது என அவர் கூறினார்.  தேசிய சமையல் எண்ணெய் -பாமாயில் திட்டம் மூலம்சமையல் எண்ணெய் உற்பத்திக்கு ரூ.11,000 கோடிக்கு  மேல் முதலீடு செய்யப்படும் என அவர் கூறினார். தரமான விதைகள் முதல் தொழில்நுட்பம் வரை விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.  முதல் முறையாகவேளாண் ஏற்றுமதியில் முதல் 10  நாடுகளில்இந்தியா இடம்பிடித்துள்ளது என பிரதமர் சுட்டிக் காட்டினார். கொரோனா காலத்தில்வேளாண் ஏற்றுமதியில் நாடு புதிய சாதனை படைத்துள்ளது. இன்றுஇந்தியா மிகப் பெரிய வேளாண் ஏற்றுமதி நாடாக அங்கீகரிக்கப்படும் போதுசமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது சரியானது அல்ல.

நாட்டின் வேளாண் கொள்கைளில் சிறு விவசாயிகளுக்குதற்போது அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பிரதமர் குறிப்பிட்டார். இந்த உணர்வுடன்கடந்த சில ஆண்டுகளில்சிறு விவசாயிகளுக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ்இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 கோடி வழங்கப்பட்டுள்ளது.  இவற்றில் ரூ. 1 லட்சம் மோடி கொரோனா காலத்தில்சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.  இதுபோன்று விவசாயிகள்நாட்டில் வரவுள்ள வேளாண் கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்கட்டமைப்புகளால் பயனடைவர்.  உணவு பூங்காக்கள்கிசான் ரயில்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதி  ஆகியவை சிறு விவசாயிகளுக்கு உதவும். கடந்தாண்டில்உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.  இந்த நடவடிக்கைகள்சிறு விவசாயிகளின் சந்தைகளுக்கான அணுகலையும்விவசாய உற்பத்தியாளர் சங்கம் மூலம்  பேரம் பேசும் சக்தியையும் அதிகரித்தது என்றும் பிரதமர் கூறினார்.

No comments

Thank you for your comments