Breaking News

நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காண்பித்து மிரட்டி நகை கொள்ளை!

வேலூர், ஆக.3-

வேலூர் மாவட்டம், காட்பாடி திருவலம் ரோட்டில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் எதிரே ராமதாஸ் நகர் உள்ளது. இங்கு வசிப்பவர் தனியார் பள்ளியின் ஆசிரியர் மனோகரன். இவர் நேற்றுமுன்தினம் இரவு இவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார். 



அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கொண்டு வந்தனர். 

அவர்கள் மனோகரன் வீட்டின் கதவை இரவு என்றும் பாராமல் வேகமாக தட்டியுள்ளனர். கதவு தட்டும் சத்தம் கேட்ட மனோகரன் எழுந்து வந்து கதவை திறந்துள்ளார். அப்போது  முகமூடி அணிந்த ஒருவன் மனோகரன் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழற்றித் தருமாறு மிரட்டியுள்ளார். 

ஆனால் ஆசிரியர் மனோகரன் அவர் யார் என்று பார்த்து கொண்டிருக்கும் போதே அவரது கழுத்திலிருந்த 6 பவுன் செயின், மோதிரம் போன்றவற்றை பறித்துக்கொண்டுள்ளார் கொள்ளையன். அத்துடன் மேலும் நகைகளை கேட்ட போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கூச்சலிட்டதால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். 

இதுகுறித்து காட்பாடி காவல் நிலையத்தில் மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓராண்டிக்கு பிறகு மீண்டும் முகமூடிக் கொள்ளையர்களின் கைவரிசை காட்பாடி பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. 

காட்பாடி பகுதிவாழ் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணிக்கு செல்வதே இல்லை. இதற்கு முன்பு இருந்த காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு கட்டாயம் இரவு ரோந்து பணிக்கு செல்ல போலீஸாருக்கு உத்தரவிட்டு வந்தார். ஆனால் தற்போது ரோந்து என்றால் என்ன என்றே தெரியாத நிலைக்கு போலீஸார் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்த துணிகர கொள்ளை நிகழ்வால் காட்பாடி பகுதி வாழ் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார் போலீஸார் அனைவரும் இரவு ரோந்து என்று சொல்லி விட்டு சித்தூர் பேருந்து நிலையத்தில் ஒன்று கூறி நின்று கொண்டு போகும் வரும் வாகனங்களை நிறுத்தி ÔபÕ வைட்டமின் பெறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதை தவிர்த்து தெருத்தெருவாக ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும என்று பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


No comments

Thank you for your comments