Breaking News

பேரணாம்பட்டு அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும் தில்லாலங்கடி வேலைகள்...!

வேலூர், ஆக.3-

🔏 நமது நிருபர் : வாசுதேவன்

பேரணாம்பட்டு அஞ்சல் அலுவலகத்தில் ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகள் நடைபெறுகிறது. இங்கு பணியாற்றும் போஸ்ட் மாஸ்டர் மற்றும் இதர அலுவலர்கள் மத்திய அரசு வழங்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு கமிஷனுக்காக தனியாருக்கு வேலை பார்த்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது..



பேரணாம்பட்டு அஞ்சல் அலுவலகத்தில் தினந்தோறும் தனியார் நிறுவனத்தால் நூற்றுக்கணக்கான கோடி செல்போன் பார்சல்கள் புக்கிங் செய்யப்படுகிறது. இந்தப் போலி செல்போன் நிறுவனங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் சில நபர்களை  பணியில் அமர்த்தி தினந்தோறும் 100 பேருக்கு கால் செய்து செல்போனை ஆர்டர் எடுப்பதாக கூறப்படுகிறது. அதாவது உங்கள் செல் நம்பருக்கு பரிசு விழுந்துள்ளது என்று பொதுமக்களை ஏமாற்றி 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை 1500 ரூபாய் அல்லது இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து அஞ்சல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார்கள். அவ்வாறு பொதுமக்கள் செல்போன் பார்சல்களை இரண்டாயிரம் கொடுத்து வாங்கிப் பார்த்தால் உள்ளே சார்ஜர் மற்றும் பவர்பேங்க், வளையல், களிமண் உள்ளிட்ட பொருள்கள் இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. இதுபோன்ற மோசடி நபர்கள் அஞ்சல் அலுவலகத்தை நாடி தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். இதுநாள் வரையில் யாரும் புகார் தெரிவிக்காததால் அஞ்சல் அலுவலர் காட்டில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் யாராவது கேட்டால் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அடித்து கூறுகின்றனர் அஞ்சல் அலுவலகத்தில் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இப்படி நூதன கொள்ளைக்கு துணைபோகின்றனர்.

இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக ஏமாற்றப்படுகின்றனர். இதுகுறித்து அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் சென்று கேட்டால் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். ஆனால் அஞ்சல் நிலையத்தில் ஒரு பார்சல் புக் செய்ய வேண்டும் என்று சொன்னால் அதில் என்ன மாதிரி பொருட்கள் உள்ளன என்று போஸ்ட் மாஸ்டர் முன்பு காண்பித்து விட்டுதான் புக்கிங் செய்ய வேண்டும் அல்லது பார்சலின் மேல் என்னென்ன பொருட்கள் உள்ளன என்று பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தகவல்கள் ஒட்ட வேண்டும். ஆனால் இவை எதுவுமே சரி பார்க்காமல் உள்ளே உள்ளது போலி பொருட்கள் என்று போஸ்ட் மாஸ்டர் உட்பட அலுவலக ஊழியர்களுக்கு தெரிந்தும் அதனை தனியார்  நிறுவனத்திடம் ஒரு பார்சல் புக்கிங் செய்தால் 100 ரூபாய் கமிஷன் என்று பெற்றுக் கொண்டு போலி பார்சலை அஞ்சல் அலுவலகத்தில் புக்கிங் செய்கின்றனர். மேலும் கூடுதல் எடை இருந்தால் அவற்றை குறைந்த அளவு எடைக்கு உண்டான பார்சல் தொகையை பெற்று புக் செய்து அரசு கணக்கில் செலுத்தி விட்டு மீதி பணத்தை அஞ்சல் அலுவலக ஊழியர்கள் பங்கு பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். எந்த தனியார் நிறுவனம் கமிஷன் அதிகமாக கொடுக்கிறதோ அவர்களிடம் கூடுதலாக கமிஷன் தொகையைப் பெற்றுக் கொண்டுதான் அஞ்சல் அலுவலகத்தில் பார்சல் புக்கிங் செய்கின்றனர். அஞ்சல் அலுவலகத்தை காட்டிலும் கொரியர் செலவு அதிகமாக உள்ளதால் இதுபோன்ற கள்ளத்தனமான பார்சல்கள் அஞ்சல் அலுவலகத்தில் குறைந்த செலவில் சில போலி நிறுவனங்கள் அலட்டிக் கொள்ளாமல் புக்கிங் செய்கின்றனர்.

இதனை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அஞ்சல் அலுவலர்கள் பார்சல் புக் செய்தால் ஒரு கமிஷன், செல்போன் பார்சலை பொதுமக்கள் வாங்கிக்கொண்டு விட்டால் ஒரு கமிஷன், பார்சலை வாங்காமல் திருப்பி அனுப்பினால் அதற்கு ஒரு கமிஷன் என்று கல்லா கட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புலம்புகின்றனர். 

போஸ்ட் கார்ட்,  இன்லன்ட் லெட்டர் உள்ளிட்டவை வேண்டுமென்று பொதுமக்கள் கேட்டால் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது, தற்போது இருப்பு இல்லை என்று கூறுகின்றனர். பணம் கட்டவோ அல்லது எடுக்கவோ பாஸ் புத்தகம் பதிவுகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் கேட்டால் சர்வர் சரி இல்லை, இன்று போய் நாளை வா என்று அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் சைனாஸ் கூலாக கூறி அனுப்பி விடுகிறாராம்.  நூறு ரூபாய் நோட்டை கொடுத்து 50 ரூபாய்க்கு அஞ்சல் அட்டை கேட்டால் மீதி சில்லரை தர வேண்டிய 50 ரூபாய் இல்லை என்று கூறுவதோடு 100 ரூபாய்க்கு அஞ்சல் அட்டையை வாங்கிச் செல் என்று வலுக்கட்டாயமாக அஞ்சல்  அட்டை வேண்டும் என்று கேட்பவர்களுக்கு கையில் திணிக்கிறாராம் சைனாஸ் எவ்ற பெண்மணி. இதுபோன்று பல்வேறு புகார்கள் கூறினாலும் நடவடிக்கை என்பது இதுவரை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்துக்கு வந்தாலே அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆனால் தாங்கள் அரசு அலுவலகத்தில் வேலை செய்கிறோமா அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறோமா என்று தெரியாமல் தனியார் நிறுவனத்திற்கு மட்டும் விஸ்வாசமாக பணியாற்றுகின்றனர். 

அதாவது குறிப்பாக பார்சல் புக்கிங் செய்யும் வேலையை கணகச்சிதமாக செய்து வருகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அஞ்சல் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவா அல்லது செல்போன் நிறுவனங்களுக்கு சேவை செய்வதற்காகவா என்று பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. பொதுமக்கள் பொறுத்து பார்த்து பொறுத்து பார்த்து பொங்கி எழுந்து திடீர் போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டனர். எனவே இதுகுறித்து அஞ்சல் துறை உயர் அதிகாரிகள்  உரிய விசாரணையை நடத்தி இதுபோன்று போலி செல்போன் பார்சல்களை எந்த ஒரு அஞ்சல் அலுவலகத்திலும் புக்கிங் செய்யாமல் நிரநதரமாக  தடை செய்ய வேண்டும். கமிஷன் பெறும் போஸ்ட் மாஸ்டர் அசோக், பெண் ஊழியர் சைனாஸ் உட்பட அஞ்சல் அலுவலக ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அஞ்சல் துறை உயரதிகாரிகளின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


No comments

Thank you for your comments