கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்நாள் தீர்வாக அரசு வேலைக்கு பரிந்துரை... அமைச்சர் சி.வெ. கணேசன் உறுதி
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் புலிவளம் கிராமத்தை சேர்ந்தவர் பகுத்தறிவு கணவர் பெயர் வீரபாண்டியன். கணவர் வீரபாண்டியன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலகுறைவால் இறந்துவிட்டார்.
கணவனை இழந்த பகுத்தறிவுக்கு பெற்றோர்களோ, உடன்பிறந்தவர்களோ யாருடைய ஆதரவும் இல்லாமால் இரண்டு பெண் பிள்ளைகளோடு புலிவளம் கிராமத்தில் கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை கவனித்துக்கொள்கிறார்.
இந்நிலையில் பகுத்தறிவு தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் சென்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசனை விருத்தாசலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நிவாரணம் கேட்டு மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் பகுத்தறிவின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அவரின் இரண்டு பெண் பிள்ளைகளின் எதிர்காலம் கருத்தில் கொண்டு தற்காலிக தீர்வாக இல்லாமல் வாழ்நாள் தீர்வாக இருக்க வேண்டும் என்பதால் கல்வித்தகுதி அடிப்படையில் ஏதேனும் ஒரு அரசு பணி பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
மேலும் இரண்டு மூட்டை அரிசி மற்றும் நிவாரணமாக ரூபாய் 2ஆயிரம் வழங்கினார்.

No comments
Thank you for your comments