புதிய குடும்ப அட்டை வழங்கல் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்
காஞ்சிபுரம், ஆக.13-
விண்ணப்பித்த குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய அட்டைகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வழங்கினார்.
கடந்த தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் மற்றும் ஆயிரத்து 500 வழங்குவதாக அறிவிதிருந்தனர். இந்நிலையில், தேர்தலில் வென்று புதிதாக பதவியேற்ற திமுக அரசு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அரசின் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்தது. இதனை அடுத்து புதிய குடும்ப அட்டை வேண்டி பலரும் விண்ணப்பித்தனர்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து புதிதாக 2500 தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார். இதயடுத்து, நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பிள்ளையார்பாளையம் பகுதியில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் வாசுதேவன் மற்றும் திமுகவைச் சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments