Breaking News

அரசு ஊழியர்களுக்கு இதய நல பரிசோதனை

காஞ்சிபுரம், ஆக.13-

மாவட்ட நிர்வாகம் தலைமையில் தனியார் மருத்துவமனை இணைந்து காஞ்சிபுரம் அரசு ஊழியர்களுக்கு இதய நல பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த ஓராண்டு காலமாக சட்டமன்ற தேர்தல் கொரானா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை என பல வகைகளில் பொது மக்களை மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களின் பணி சுமையால் பெரிதும் அவதிப்பட்டனர்.  இது போன்ற பல நிலைகளில் அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு கொரானா நோய் பரவலை தடுக்கும் தேர்தல் பணிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் சிறப்பாக பணி புரிந்து நற்பெயரை பெற்றுத் தந்தனர்.

இந்நிலையில் தற்போது புதிய அரசு பதவியேற்று பல்வேறு துறைகளில் காலதாமதமாக இருந்து அனைத்து கோப்புகளும் விரைவாக சரிசெய்யப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இவர்கள் தங்கள் நேரங்களை அதிக அளவில் செலவிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 

இதனை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 14க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு உடல் நலம் காக்கவும் குறிப்பாக இதய நோய்கள் அதிக அளவில் அக்கறை கொள்ள வேண்டிய சூழ்நிலையில், சென்னை புகழ் பெற்ற சிறப்பு மருத்துவமனையான ஹெல்த்சிட்டி குளோபல் மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

இதில் ஊழியர்களுக்கு முதற்கட்டமாக உயரம், ரத்த அழுத்தம், உடல் எடை பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்டமாக ஈசிஜி பரிசோதனையும் அதில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டால் எக்கோ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும் இதய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் அவசர நிலையில் எவ்வாறு செயல்படுத்த வேண்டிய நிலை குறித்து சிறப்பு மருத்துவர் விளக்கம் அளித்தார்.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் உடல் நிலையை பரிசோதித்து கொண்டனர் அரசு ஊழியர்களிடையே இச்செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இம்முகாமில் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன், நிறுவன தொடர்பு அலுவலர் பாஸ்கர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments