அடுத்த 3 ஆண்டுகளில் அமெரிக்கா தரத்தில் இந்தியா - மத்திய அமைச்சர் தகவல்
அகமதாபாத்:
டெல்லி-மும்பை அதிவிரைவு நெடுஞ்சாலைப் பணி மிக விரைவாக நடைபெற்றுவருவதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவுபெற்றதை குறிக்கும் விழா காணொலி வாயிலாக நடைபெற்றது. அந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோருடன் மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்றார்.
குஜராத்தின் தீசா நகரில் அமைக்கப்பட்டுள்ள 3.75 கி.மீ. உயர்த்தப்பட்ட 4 வழிச்சாலையை கட்காரி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் அமெரிக்க தரத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். முன்பு தினமும் 2 கி.மீ. வீதம் நெடுஞ்சாலைகள் அமைத்துக் கொண்டிருந்த நாம், தற்போது தினமும் 38 கி.மீ. வீதம் நெடுஞ்சாலைகள் அமைக்கிறோம்.
மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மற்றும் இமயமலை பகுதிகளை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலை அமைக்கும் பெரும் திட்டமான பாரத்மாலா பரியோஜனாவில் குஜராத்தில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் முதலமைச்சர் விஜய் ரூபானி நேரடியாக வழிகாட்டி உதவ வேண்டும்.
டெல்லி-மும்பை அதிவிரைவு நெடுஞ்சாலைப் பணி மிக விரைவாக நடைபெற்றுவருகிறது. அதில், குஜராத்தின் வதோதரா-மும்பை இடையிலான 8 வழிச் சாலையும் ஒரு பகுதியாகும்.
டெல்லி-மும்பை அதிவிரைவு நெடுஞ்சாலை, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் மாநில பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.
இந்த நெடுஞ்சாலையால் புதிய வர்த்தக, தொழில் வாய்ப்புகள் உருவாகும். அவை விவசாயிகளுக்கு கைகொடுக்கும். ஒரு வளர்ச்சி எந்திரமாக அமையும் இந்த நெடுஞ்சாலை, குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும்.
दीसा एलिवेटेड कॉरिडोर का उद्घाटन देश के गृह मंत्री श्री @AmitShah जी और गुजरात के मुख्यमंत्री श्री @vijayrupanibjp जी की उपस्थिति में हुआ। NH 27 पर बना यह कॉरिडोर ईस्ट-वेस्ट इकनॉमिक कॉरिडोर का हिस्सा है और यह कांडला और मुंद्रा बंदरगाह के संपर्क को सुगम बनाएगा। pic.twitter.com/gmY8XmLgnk
— Nitin Gadkari (@nitin_gadkari) August 7, 2021

No comments
Thank you for your comments