Breaking News

அரசு பஸ் சிறை பிடிப்பு.... குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்...


கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் அடுத்த  எழுத்தூர் ஊராட்சியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் இவர்களுக்கு குடிதண்ணீர்  மற்றும் மின்சாரம் தடை அவ்வப்போது ஏற்பட்டுவந்துள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிபட்டு வந்தனர்.


இதுபற்றி  ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் செய்தும்  சரி செய்யப்பவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்    இராமநத்தம் -எழுத்தூர் வழியே ஒரங்கூர் செல்லும் அரசு பேருந்தினை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவலறிந்துவந்த  இராமநத்தம் காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையிலான  போலிசார் பொதுமக்களிடம் சுமுக பேச்சுவார்த்தை நடத்தினார். 

பின்பு ஊராட்சி மன்ற தலைவர் அருந்தவம் கருப்பையா 1 வார காலத்தில் குடிநீர் பிரச்சினையும் மின்சாரமும் தடை இல்லாமல் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இதனை ஏற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

No comments

Thank you for your comments