லக்கூர் ஊராட்சியில் இயற்கையை போற்றும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
திட்டக்குடி :
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள லக்கூர் ஊராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் இயற்கை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை வழங்கி 75 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ராமர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் எல்.ஆர்.ரமேஷ் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து, சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்களுக்கு லட்டு, சாக்லெட் இனிப்புகளை வழங்கி பலா, மா, நெல்லி, கொய்யா உள்ளிட்ட பலன் தரும் 500 மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் செல்லமுத்து, ராமர், வழக்கறிஞர் பாலமுருகன், ராபின்யாதவ், மணிகண்டன், ஷாருகான், ஆனந்த், மணி, ராமர் மளிகை, நாட்டாமை கிருஷ்ணமூர்த்தி, சங்கீத், வசந்த், பரத், கோபி, கொளஞ்சி, குமார், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments