Breaking News

ஜவுளி கடைகளின் வாகன நிறுத்தமாக மாறும் வட்டாட்சியர் அலுவலகம்..!

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறைக்கு சொந்தமான அவசர மற்றும் 108  ஊர்திகள் பயன்பாட்டில்  நிறுத்தும் இடமாக உள்ள இடங்களில், வாடகை வாகனங்களும் தனிநபர் வாகனங்களும் நிறுத்துவதால் வாகன நெரிசல் ஏற்படுகின்றன. 

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நீதிமன்றங்கள் தீயணைப்புத்துறை அவசர ஊர்தி என 108 ஆம்புலன்ஸ் அலுவலகம் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலக வாகனங்களும் நிறுத்தப்பட்டு அவசர நேரங்களில் பயன்படுத்தி வருகின்றனர். 


அவ்விடங்களில் தனியார் பட்டு சேலை கடைகளுக்கு வரும் ஏராளமான கார், சுமோ உள்ளிட்ட எண்ணற்ற வாகனங்கள், வாடகை வாகனங்களும் தனிநபர் வாகனங்களும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினந்தோறும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து நிறுத்துவதால் ஏற்படும் நெரிசலில் அவசர ஊர்தியும், தீயணைப்புத்துறை வாகனங்கள் செல்ல தடையாகவும் 108 ஆம்புலன்ஸ் இவைகள் எளிதில் செல்லக்கூடிய அளவுக்கு இல்லாத நெரிசலாக ஏற்படுத்துவதால், அதிகாரிகள் கவனத்தில் எடுத்து அவற்றை சரி செய்து தருமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 



No comments

Thank you for your comments