காங்கிரஸ் கமிட்டி சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு வட்டாரம் கீரநல்லூர் கிராமத்தில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் அளவூர் வி. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் மேற்கு வட்டார தலைவர் நிகோலஸ் முன்னிலையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் அளவூர் வி.நாகராஜன் பங்கேற்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து விளக்கி பேசியும், கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய ஆக்கப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக இந்நிகழ்வின் போது கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி சிவா ஹரி கிருஷ்ணன் என்பவர் காஞ்சிபுரம் காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் அளவூர் வி.நாகராஜன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஆலோசனை கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருணாச்சலம், மாவட்ட துணைத்தலைவர்கள் வனிதா மகேந்திரன் சரவணன் லட்சுமி நரசிம்மன், மாவட்ட செயலாளர்கள் கே பி சரவணன் செல்வம் காஞ்சிபுரம் வட்டார தலைவர் சம்பத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments