பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு
ஈரோடு:
கோபி செட்டிபாளையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்- அறிவிப்பு என்று கோபிசெட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்.முனுசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
போக்குவரத்து துறையில் வரி கட்டாத மற்றும் இதர குற்றங்களுக்காக பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் சிறை பிடிக்கப்பட்டு வாகன உரிமையாளர்களால் உரிமை கோரப்படாமலும் மற்றும் நிதியாளர்களால் விடுவிக்கப்படாமலும் நீண்டகாலமாக கோபி செட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 76 பல்வேறு வகையான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது இயக்க இயலாத நிலையிலும் மற்றும் துருப்பிடித்த நிலையிலும் உள்ளது. தமிழக தலைமைச் செயலர் அவர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையர் சென்னை அவர்களது சுற்றறிக்கையின்படி பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 10.08.2021 தேதிக்குப் பின்னர் கோபி செட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்) செலுத்தி ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். 13.08.2021-ம் தேதி மாலை 05.45 மணி வரை ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்களை, 23.08.2021 மாலை 05.45 மணிக்குள் கோபி செட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
முன்பணம் தொகை ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வங்கி வரைவோலை செலுத்துபவர்கள் மற்றும் நடப்பு ஜிஎஸ்டி கணக்கு வைத்திருப்பவர்கள் மேலும் கடந்த ஆண்டு வருமான வரி செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் 10.08.2021 தேதி முதல் 19.08.2021 தேதி வரை கோபிசெட்டிபாளையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பவானி மற்றும் சத்தியமங்கலம் பகுதி அலுவலகங்களில் பார்வையிடலாம்.
24.08.2021 காலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கோபிசெட்டிபாளையத்தில் காலை 11.00 முதல் மாலை 05.00 மணி வரையிலும் ஏலம் விடப்படும் என கோபிசெட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்.முனுசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
No comments
Thank you for your comments