கல்குவாரிகள் மாலை 5 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி பெற்றுள்ள கல்குவாரிகள் காலை 7 மணி முதல், மாலை 5 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும்.
கனிம இருப்பு கிடங்கு மற்றும் கல் அரைக்கும் அரவை இயந்திரம் அமைத்து தொழில் புரிய கனிம முகவர் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கனரக லாரியில் ஜல்லி, எம்சாண்ட் மற்றும் இதர கனிமங்களை அனுமதி சீட்டு பெற்று தார்ப்பாய் கொண்டு நன்கு மூடி பொது மக்கள் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறு மின்றி எடுத்துச் செல்ல வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் எம் சாண்ட் தயாரிக்கும் கல் அரவை எங்கள் குறித்தும் பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
அனுமதியின்றி கனிம இருப்பு கிடங்குகள் அமைத்து செயல்படுவது குற்றமாகும். எனவே சட்டப்படி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்து கனிம இருப்புக் கிடங்கினை உடன் பதிவு செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கனிம இருப்பு அனுமதிதாரர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டை கனிமம் எடுத்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் தவறாது வழங்க வேண்டும்
கனரக லாரியில் ஜல்லி, எம்சாண்ட் மற்றும் இதர கனிமங்களை அனுமதி சீட்டு பெற்று தார்ப்பாய் கொண்டு நன்கு மூடி பொது மக்கள் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறு மின்றி எடுத்துச் செல்ல வேண்டும்.
குவாரி குத்தகை உரிமையாளர்கள் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் இசைவில் தெரிவித்து உள்ளவாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே உரிமம் வழங்கப்பட்ட பரப்பில் குவாரி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குவாரியில் இருந்து கனிமம் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு நடை சீட்டில் உள்ள விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு வாகன ஓட்டுனரி டம் வழங்க வேண்டும்.
மேலும் கனிம இருப்பு கிடங்குகள், கல் அரைக்கும் இயந்திரங்கள் பதிவு செய்யாமல் இயங்குவதும், வாகனத்தில் உரிய அனுமதி இன்றி கனிமம் எடுத்துச் செல்வது, மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வது ஆகியவை கண்டறியப்பட்டால், கனிமங்களும் சுரங்கங்களும் மேம்படுத்துதலும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் விதியின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்படி சட்டப்பிரிவில் அபராதத்துடன் அதிகபட்ச தண்டனையாக 5 வருட சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்து உள்ளார்.
No comments
Thank you for your comments