கே எஸ் அழகிரி குறித்து அவதூறாக செய்தி வெளியீடு - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:
வார இதழ் ஒன்றில் காங்கிரஸ் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி அவதூறாக செய்தி வெளியிட்டதை கண்டித்து காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குமுதம் வார இதழில் அவதூறாக சித்தரித்து செய்தி வெளியிட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நகர காங்கிரஸ் தலைவர் நாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் குமுத நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் வார இதழில் குறிப்பிட்டுள்ள அவதூறு சித்தரித்து செய்தியை வெளியிட்டதை மன்னிப்பு கேட்கவேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
No comments
Thank you for your comments