குடும்பத் தகராறு... ஆவேசத்தால் நேர்ந்த விபரீதம்... - போலீஸார் விசாரணை
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இறையூர் மாரியம்மன் கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கவர்னர் இவருக்கு கார்த்திகேயன், கவியரசன் என 2 மகன்கள் உள்ளனர்.
![]() |
உயிரிழந்த கார்த்திகேயன் |
மூத்த மகன் கார்த்திகேயன் (வயது-30) வெல்டர் பணி செய்து வருகிறார்.
இளைய மகன் கவியரசன்(வயது-21) இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். மேலும் இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கார்த்திகேயன் குடிபோதையில் தாய் கமலா, தந்தை கவர்னர் ஆகிய இருவரிடமும் நேற்று முன்தினம் இரவு ஆபாசமாக திட்டி கொண்டு இருந்தார். அதனை பார்த்த இளைய மகன் கவியரசு கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது
இதில் ஆத்திரமடைந்த கவியரசன், ஆவேசத்தில்கீழே கிடந்த மூங்கில் உருட்டு கட்டையால் கார்த்திகேயனை தலையில் பலமாக தாக்கினார்.
இதில் சம்பவ இடத்திலே மயக்கம் போட்டு விழுந்தார் கார்த்திகேயன். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேலும், மேல் சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தாய் கமலா கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து கவியரசனைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவேசத்தில் அறிவிழந்ததால் நேர்ந்த விபரீதம்... அனைவரும் கஷ்டத்தில் ஆழ்த்தி உள்ளது.
நிதானமே நிம்மதியான வாழ்க்கையை தரும் என்பதை உணரவேண்டும்...
No comments
Thank you for your comments