Breaking News

இந்திய அரசின் நிதி ஆயுத் மூலம் உயர் ரக தொழில் நுட்ப அறிவியல் ஆய்வக் கூடம்

காஞ்சிபுரத்திலுள்ள  பிரபல தனியார் பள்ளியில் இந்திய அரசின் நிதி ஆயுத் மூலம் அடல்  டிங்கரிங் என்ற உயர்ரக தொழில் நுட்ப அறிவியல் ஆய்வக் கூடத்தினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் S.அருள்செல்வம்   திறந்து வைத்தார்.


காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் தெருவில்  சோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற  பிரபல  தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளி வளாகத்தில்  இந்திய அரசின் நிதி ஆயுத் மூலம் அடல் டிங்கரிங் என்ற உயர்ரக தொழில் நுட்ப அறிவியல் ஆய்வக் கூடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவானது  அப்பள்ளியின் தாளாளர் சஞ்சீவி ஜெயராம் தலைமையில், பள்ளியின் முதல்வர் ஞானப்பண்டிதர் முன்னிலையில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் S.அருள்செல்வம் திறந்து வைத்து,  அக்கூடத்தில் அமைக்கப்படிருந்த பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு மாணவர்களை வெகுவாக பாராட்டினார். 

அதன் பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் தொடர்பான கருத்தரங்கு கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி  பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் பங்கேற்று ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப அறிவியல் பயிற்சியினை வழங்கினார்.மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் டாக்டர் எஸ்.அமுதா ஆசிரியர்களுக்கு பல்வேறு  ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் டி.தயாளன், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.


No comments

Thank you for your comments